கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை 
தேசம்

இனி தினசரி கரோனா அறிவிப்பு கிடையாது!- கேரள அரசு

காமதேனு

தினசரி கரோனா தொற்றாளர்களின் நிலவரம், உயிர் இழப்பு குறித்த தகவல்களை இனி அறிவிக்கப்போவது இல்லை என கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் போது கட்டுக்குள் இருந்த கரோனா, இரண்டாவது அலையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. கேரளத்தில் இதுவரை 65 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 223 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்றைய நாளில் 5 பேர் உயிர் இழந்தனர். அவர்களுக்கும் ஏற்கெனவே பல்வேறு இணை நோய்கள் இருந்தன. கேரளத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றுக்கு 68,365 பேர் பலியாகி இருந்தனர். இப்படியான சூழலில் கேரளத்தில் உயிர் இழப்புகள் ஒற்றை இலக்கத்திலும், புதிய நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை 250க்கு கீழ் வந்ததாலும் அம்மாநில அரசு, இனிமேல் கரோனா வைரஸ் அன்றாட பாதிப்பு, உயிரிழப்புக் குறித்த தகவல்களை வெளியிடாது என அறிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 7-ம் தேதியில் இருந்து, கேரளத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுவிட்டது. முகக்கவசம் அணிவதும், அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்துகொள்வதும் மட்டுமே போதும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளத்தில் மொத்தம் 16 மாவட்டங்கள் உள்ளன. மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் மிக, மிகக் குறைவான அளவிலேயே தொற்று பாதிப்பு இருப்பதாலும், பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாலும் கேரள அரசு இனி கரோனா நிலவரம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படாது என அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT