தேசம்

4 ஆயிரம் காவலர்களுக்கு கறி விருந்து; சர்பிரைஸ் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபு: காரணம் என்ன?

ரஜினி

4 ஆயிரம் காவலர்களுக்கு சர்பிரைஸாக கறி விருந்து அளித்துள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு.

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டியின் போது விளையாட்டு வீரர்கள் தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து அவர்கள் செல்லும்போது பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து 4,000 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று பாராட்டு தெரிவித்து கறி விருந்து அளித்தார். மேலும் காவலர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உணவு பரிமாறிய சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டிஜிபி சைலேந்திர பாபு காவலர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

SCROLL FOR NEXT