தேசம்

குமரி முதல் இமயம்வரை மாட்டுவண்டி பயணம் செய்யும் சேலம் விவசாயி மகன்: காரணம் இதுதான்

காமதேனு

நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும், விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி முதல் இமயமலை வரை விழிப்புணர்வுக்காக மாட்டுவண்டிப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசூரியன். சென்னையில் சினிமாதுறையில் உதவி இயக்குநராக இருந்த இவர் இப்போது சொந்த ஊரில் விவசாயப் பணிகளைச் செய்துவருகிறார். இப்போது இவர் அழிந்து வரும் நாட்டுமாடுகளைப் பாதுகாக்க வேண்டும், விவசாயத்தை காக்கவேண்டும் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் இமயமலைவரை மாட்டுவண்டியில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுவருகின்றார்.

குமரியில் இருந்து பயணத்தை தொடங்கிய சந்திர சூரியன், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்கள் வழியாக 3000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இவர் ஆறுமாதங்களில் இமாச்சலப் பிரதேசத்தில் தன் பயணத்தை நிறைவுசெய்கிறார்.

இதுகுறித்து விவசாயி சந்திர சூரியன் கூறுகையில், “நான் பட்டதாரி. விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். விவசாயிகளுக்கு இன்று கட்டுப்படியான விலை இல்லை. அந்தத் துயரை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டும். என்பதற்காகத்தான் இந்தப் பயணம்” என்றார்.

SCROLL FOR NEXT