உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்)
உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்) 
தேசம்

`மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்'- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்

காமதேனு

உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் கல்வியை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரால் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பைத் தொடர மத்திய, மாநில அரசுகளை நம்பியிருந்தனர். ஆனால், உக்ரைனில் மருத்துவம் படித்து பாதியில் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் படிக்க இடம் வழங்க விதிகளில் இடமில்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், போர்ச்சூழல் காரணமாக உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு பொருத்தமான வெளிநாட்டு கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காணுவதற்கு உரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் ஏற்கெனவே ஓராண்டு படிப்பை இழந்து விட்டதை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT