தேசம்

வகுப்பறைக்குள் 18 மணிநேரமாக பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவி; கதவை உடைத்து மீட்ட பெற்றோர்: உ.பியில் நடந்தது என்ன?

காமதேனு

உத்தரப்பிரதேசத்தில் வகுப்பறைக்குள் வைத்து பூட்டப்பட்ட 2-ம் வகுப்பு மாணவி 18 மணி நேரமாக பூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உள்பட 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் அரசு பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம் போல வகுப்பறைகள் பூட்டப்பட்டன. இந்த பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவளது பெற்றோர், உறவினர் நீண்ட நேரமாக தேடி அலைந்தனர். இந்த தகவல் அறிந்த கிராமத்து மக்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

தங்கள் குழந்தை படித்த பள்ளி வந்து பார்த்த போது அனைத்து வகுப்பறைகளும் மூடப்பட்டிருந்தன. அந்த மாணவி படிக்கும் வகுப்பறையில் இருந்து அழுகைச்சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வகுப்பறைக் கதவை உடைத்தனர். அங்கு 2-ம் வகுப்பு மாணவி அழுது கொண்டிருந்தார். சுமார் 18 மணி நேரமாக அவர் வகுப்பறையில் உணவு, குடிநீர் இன்றி அழுது கொண்டிருந்தது தெரிய வந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள்,ஒரு அலுவலக உதவியாளர் உள்பட 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதே போல சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழு வயது சிறுமி 18 மணி நேரம் வகுப்பறையில் அடைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் உ.பியில் சமீபத்தில் நடைபெற்றது. அனைத்து குழந்தைகளும் வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டனரா என்று உறுதி செய்யப்பட்டனரா என்பதை உறுதி செய்த பின்பே வகுப்பறைகளைப் பூட்ட வேண்டும் என்று உ.பி மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT