சிங்கப்பூர் வர்த்தகதுறை அமைச்சர்,முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சிங்கப்பூர் வர்த்தகதுறை அமைச்சர்,முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
தேசம்

சிங்கப்பூர் வர்த்தகத் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

காமதேனு

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களை அவர் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட கேட்டுக்கொண்டார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, ஜனவரியில் நடைபெற உள்ள மூதலீட்டாளர் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவதற்காக அமைச்சர் ஈஸ்வரன் தனது பாராட்டுக்களை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொண்டார்.

SCROLL FOR NEXT