சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு
சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு 
தேசம்

சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு

காமதேனு

சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து தொழில் தொடங்குவதற்கு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களை இன்று சந்தித்துப் பேசினார். டமாசெக் (Temasek) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா, செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க், கேப்பிட்டா லேண்ட் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா, தேமாசெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆகியோருடன் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இதன் பின்னர் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். வரும் 26-ம் தேதி வரை சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், பின்னர் ஜப்பான் செல்கிறார்.

SCROLL FOR NEXT