சாட்ஜிபிடி 
தேசம்

3 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கிய சாட்ஜிபிடி

காமதேனு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பயன்பாட்டுத் தளமான சாட்ஜிபிடி நேற்றிரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியது, அதன் பயனர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இணையப் பயன்பாடுகளில் மாபெரும் புரட்சியாக அண்மையில் அறிமுகமானது சாட்ஜிபிடி. ஓபன் ஏஐ நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சார்ந்த இதன் சாட்பாட் பயன்பாடுகளில், தனிநபர்கள் மட்டுமன்றி பெரும் தொழில் நிறுவனங்களுக்கும் பலனடைந்து வருகின்றன. இந்த செயற்கை நுண்ணறிவினை நம்பி, பெருமளவிலான நிறுவனங்கள் ஆட்குறைப்பையும் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் நேற்றிரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக சாட்ஜிபிடி முடங்கியது அதன் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகம் தென்பட்டது. இதனை ஓபன் ஏஐ நிறுவனமும் உறுதி செய்தது. தற்போதைய சாட்ஜிபிடி பயன்பாடு என்பது சோதனையோட்ட அளவிலானது என்ற போதும், இம்மாதிரியான முடக்கங்கள் அதனை நம்பியோருக்கு அதிர்ச்சி தந்துள்ளன.

நேற்றிரவு உலக அளவில் தொடங்கிய முடக்கம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பின்னர் பின்னிரவில் தொடங்கி படிப்படியாக சாட்ஜிபிடி இயல்புக்கு திரும்பியது. முதலில் சந்தாரர்களுக்கும் அதன் பிறகே இதர பயனர்களுக்கும் சாடிஜிபிடி பயன்பாடு திரும்பக் கிடைத்தது.

SCROLL FOR NEXT