தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா
தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா நிதி மோசடி: தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு
தேசம்

நிதி மோசடி: தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு

காமதேனு

தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபா முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது நிதி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையில் நடந்த முதற்கட்ட விசாரணையில் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தட்சிண் பாரத் இந்தி பிரச்சார சபாவின் மறைந்த தலைவர் நிரல்கோட்டி மற்றும் 2014-ம் ஆண்டிலிருந்து செயல் தலைவராக இருந்த அவரது மகன் சிவயோகி நிரல்கோட்டி உள்ளிட்ட சில அரசு அதிகாரிகள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழியை வளர்ப்பதற்காக மத்திய அரசு அளித்த 5.78 கோடி ரூபாயைப் பயன்படுத்தாமல் நிதி முறைகேடு செய்த விவகாரத்தில் சிபிஐ இங்நத வழக்கைப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சிபிஐ விசாரணையில், 2004 -2005 நிதியாண்டு முதல் 2016 - 2017 நிதியாண்டு இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்து இந்தி மொழியை வளர்ப்பதற்குப் பயன்படுத்தாமல், ஆயுர்வேதா ஹோமியோபதி சட்டக்கல்லூரி மற்றும் ஆங்கில வழிக்கல்வி ஆகியவற்றிற்காக முறைக்கேடாக பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் அனுமதி பெறாமல் கல்வி நிறுவனங்களை அமைத்து இந்தியைத் தவிர மற்ற படிப்புகளுக்குப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT