hindu கோப்பு படம்
hindu கோப்பு படம்
தேசம்

கேரளத்தில் பஸ் கட்டணம் அதிரடி உயர்வு

என்.சுவாமிநாதன்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை ஏற்றத்தினால் கேரளத்தில் அரசுப் பேருந்துகளில் இன்றுமுதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கேரளத்தில்தான் ஆட்டோ கட்டணம் மிகக்குறைவு. இதனால் அங்கு ஆட்டோக்களில் அதிக ஓட்டம் இருக்கும். அதேநேரம் பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறிக்கொண்டே வருவதால் கேரளத்தில் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தவும், தனியார் டிராவல்ஸ் வாகனங்களின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளவும் கேரள அரசிடம் அனுமதி கோரின. இதுகுறித்து உரியமுறையில் ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் கட்டணத்தை உயர்த்தலாம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அரசுப்பேருந்துகளிலும் இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி கேரள அரசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயில் இருந்து, பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு பயணக்கட்டணம் 90 பைசாவில் இருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கேரளத்தில் ஆட்டோவில் குறைந்தபட்சக் கட்டணமாக இருந்த 25 ரூபாய், 30 ரூபாயாகவும், டாக்ஸிகளில் குறைந்தபட்சக் கட்டணம் 175 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT