தேசம்

தனியார் பள்ளிக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்: இரண்டாவது நாளாக விடுமுறை

காமதேனு

தனியார் பள்ளிக்கு இரண்டாவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படாததால் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நிம்மதி அடைந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு மீண்டும் அப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் அந்த பள்ளியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை கொடுக்காமல் போனாலோ, வீட்டுப்பாடம், தேர்வு போன்ற காரணத்தாலோ மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். கடந்த இரண்டு நாட்களாக ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கும் சம்பவம் மாணவர்களே செய்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT