பெண் நீதிபதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள்  கைது
பெண் நீதிபதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது மின்னல் வேகத்தில் வந்த பைக்: பெண் நீதிபதியை கீழே தள்ளி பணப்பையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்
தேசம்

மின்னல் வேகத்தில் வந்த பைக்: பெண் நீதிபதியை கீழே தள்ளி பணப்பையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

காமதேனு

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண் நீதிபதியை கீழே தள்ளி விட்டு அவரது பணப்பையைப் பறித்துச் சென்ற இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் குலாபி பாக் பகுதியில் தனது வீட்டிற் கு வெளியே தனது 12 மகனுடன் பெண் நீதிபதி மார்ச் 6-ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் டூவீலரில் வந்த இருவர், பெண் நீதிபதியை கீழே தள்ளி அவரது கைப்பையைப் பறித்துச் சென்றனர். அவர்கள் தள்ளி விட்டதில் தலையில் காயமடைந்த பெண் நீதிபதியை, அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து கடந்த வாரம் அளிக்கப்பட்ட புகாரில், பெண் நீதிபதியிடமிருந்து ரூ.18 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிவிடி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தில்ஷாத், ராகுல் என்பவர்கள் என அடையாளம் காணப்பட்டது. அவர்களை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து டூவீலர்,ஏடிஎம் கார்டு, 4500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் மீட்டனர். இதில் தில்ஷாத் மீது ஏற்கனவே 10 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT