தேசம்

உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சி: கடற்படை அதிகாரி கைது

காமதேனு

லக்னோவில் வரதட்சணைக்காக உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் அபிஷேக் சங்கர். கடற்படை அதிகாரியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு பூனம் பாண்டே என்பவரை திருமணம் செய்தார். திருமணமானதில் இருந்து பூனம் பாண்டேவிடம் வரதட்சணை கேட்டு அபிஷேக் சங்கர் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பூனம் பாண்டைவை அபிஷேக் சங்கரும், அவரது தாயும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய பூனம் பாண்டே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடற்படை அதிகாரியான அபிஷேக் சங்கரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது தாயைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மத்திய மண்டல காவல் துறை டிசிபி அபர்ணா ரஜத் கௌசிக் கூறுகையில்," பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி அபிஷேக் சங்கரை நேற்று கைது செய்துள்ளோம். அத்துடன் அவரது தாயைத் தீவிரமாக தேடிவருகிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT