தேசம்

குழந்தைகளைக் கடத்துவதாக துறவிகள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் வைரலாகும் வீடியோ

காமதேனு

குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சாங்லியில் துறவிகள் தாக்கப்பட்ட சம்பவ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்கிலியில் தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு துறவிகள் குழந்தைகளைக் கடத்த முயன்றதாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில்," உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த துறவிகள் கர்நாடகாவின் பிஜாபூரில் புனித யாத்திரை சென்று திரும்பினர். பின்னர் சோலாப்பூரில் உள்ள பந்தர்பூருக்கு தரிசனம் செய்யச் சென்றபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாங்கியில் ஒரு குழந்தையிடம் உதவி கேட்ட போது, கிராம மக்கள் அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டு தாக்கத் தொடங்கியுள்ளனர். துறவிகள் மதுராவில் உள்ள பஞ்ச தஷ்னம் ஜூனா அகடாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டனர். அவர்கள் எங்களிடம் புகார் கூறவில்லை. ஆனால், வைரல் வீடியோக்களை ஆராய்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினர்.

SCROLL FOR NEXT