சபரிமலை
சபரிமலை 
தேசம்

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதியா?- சர்ச்சையை கிளப்பிய அறிக்கை

காமதேனு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரள அரசு காவல்துறைக்கு அனுப்பிய வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலம் தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லத் தொடங்கியுள்ளனர். சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கிறார். அதனால் சபரிமலையில் 10 வயதுக்கு மேலும், 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் செல்வதற்கு அனுமதியில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் உச்சநீதிமன்றம் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. அதைக் கேரள அரசு, மிகத்தீவிரமாக அமல்படுத்தியது. இதனால் கேரளத்தில் இடதுசாரி கட்சிகள் இந்து உணர்வாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அனைத்து வயதுடைய பெண்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி உச்சநீதிமன்ற சீராய்வில் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்புதான் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த இடைவெளியில் ரெகானா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குச் சென்றதும், கேரள அரசின் உத்தரவின்பேரில் கேரள போலீஸார் அவர்களை அழைத்துச் சென்றதுமே சர்ச்சையானது. இந்நிலையில், இப்போது கேரள அரசு, கேரள போலீஸாருக்கு சபரிமலை சீசனை முன்னிட்டு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், 28.09.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என கொடுத்துள்ளது. இது சர்ச்சையானது. இதை பாஜக உள்ளிட்டக் கட்சியினர் சமூகவலைதளங்களில் பரப்பினர்.

இந்நிலையில் கேரளக் காவல்துறை ஏடிஜிபி அஜித்குமார் அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் அந்தப் பகுதி நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், “இதுகுறித்து கேரள அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. சபரிமலை விசயத்தில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்”என்றார்.

SCROLL FOR NEXT