தேசம்

காரில் ஏற முயன்ற குமரி டாஸ்மாக் மேலாளர்; அதிர வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை: சோதனையில் 1.77 லட்சம் பறிமுதல்!

காமதேனு

குமரி டாஸ்மாக் மேலாளரிடம் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 1.77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருப்பவர் விஜய சண்முகம்(50). திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்துவந்தார். இவர் டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்குவதாகத் தொடர்ந்து புகார்கள் சென்றது. இந்நிலையில் பைப்புவிளை பகுதியில் டாஸ்மாக் மேலாளர் விஜயகுமார் தன் காரில் ஏற நடந்து வந்து கொண்டிருந்தார். காரை வடசேரி டாஸ்மாக் கடை விற்பனையாளரும், விஜயகுமாரின் ஓட்டுநருமான ரெஜின் காரை எடுக்க முயன்றார்.

அப்போது அங்குவந்த டி.எஸ்.பி பீட்டர்பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் த்துறையினர் சுற்றிவளைத்து அப்போதே விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து, டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் தங்கியிருந்த விடுதியிலும் சோதனை செய்தனர். அங்கு கணக்கில்வராத 1.77 லட்சம் பணம் இருந்தது. தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம், கடைக்காரர்களிடம் அவரது ஏஜென்டாகவும் செயல்பட்டு பணம் வசூல் செய்த டிரைவர் ரெஜின் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT