அருண்குமார் கைது  வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் ஆபாச புகைப்படம்; பதறிய உறவினர்கள்: முகத்தை மார்பிங் செய்து பரப்பியவர் கைது
தேசம்

வாட்ஸ்அப்பில் வந்த பெண்ணின் ஆபாச புகைப்படம்; பதறிய உறவினர்கள்: முகத்தை மார்பிங் செய்து பரப்பியவர் கைது

காமதேனு

பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தின் மூலமாக பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம், வாட்ஸ் அப் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வந்துள்ளது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சைபர் க்ரைம் போலீஸார் அருண்குமாரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT