அமெரிக்கா புயல் 
தேசம்

2,600 விமானங்கள் ரத்து... அமெரிக்காவை அதிர வைத்த சூறாவளி புயல்!

காமதேனு

மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல் மற்றும் கனமழை காரணமாக அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், நியூயார்க்,  டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உட்பட 10 மாகாணங்களைத் தாக்கியது. இந்த பலத்த சூறாவளி காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும், கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.  இந்த புயலால் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. புயலின் போது மின்னல் தாக்கியும், மரம் விழுந்தும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. மேலும் தேசிய உயிரியல் பூங்கா,  நூலகங்கள், அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல்-கனமழை காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 2,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா சூறாவளி
SCROLL FOR NEXT