அமேசான்
அமேசான் 
தேசம்

மேலும் 9,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்!

காமதேனு

2 மாதங்களுக்கு முன்னர் 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம், தற்போது மேலும் 9000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

சர்வதேச அளவில் மிகப்பெரும் மின் வணிக நிறுவனமாக அமேசான் செயல்பட்டு வருகிறது. தனது செலவின கட்டுப்பாடு மற்றும் நட்டத்தை தவிர்க்கும் நடவடிக்கை என்ற பெயரில், தொடர்ந்து ஊழியர்களை அமேசான் பணி நீக்கம் செய்து வருகிறது. ஜனவரி மாதம் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த அமேசான், தற்போது புதியாத 9000 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது.

உலகளவிலான பொருளாதார மந்தம் மற்றும் கரோனா காலத்துக்கு பிந்தைய வீழ்ச்சியிலிருந்து மீளாத நிறுவனங்கள் என்ற காரணங்களின் பின்னணியில், மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நீக்கம் செய்து வருகின்றன. டெக் நிறுவனங்கள் இதில் முன்னிலை வகித்தன. ட்விட்டர், மெட்டா, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்டவை இதில் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன.

ஃபேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா, கடந்த வாரம் 10,000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்ததோடு, 5,000 காலிப்பணியிடங்களை நிரப்பும் ஏற்பாடுகளை திரும்பப்பெற்றது. கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை ஜனவரியில் பணி நீக்கம் செய்தது. இந்த வரிசையில் மீண்டும் அமேசான் நிறுவனம் தற்போது இடம் பிடித்திருக்கிறது.

SCROLL FOR NEXT