அமர்நாத் யாத்திரை  
தேசம்

அமர்நாத் யாத்திரை... ஜம்முவில் கட்டாய மருத்துவப் பரிசோதனைக்கு 112 மருத்துவர்கள் நியமனம்!

சிவசங்கரி

அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் ஜம்மு எல்லையில் உடற் தகுதி குறித்து கட்டாயமாக மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டு தகுதிச் சான்றிதழ் பெறவேண்டும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்க இருப்பதால் யாத்ரீகர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள இன்று 112 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அமர்நாத் யாத்திரை

தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். இங்கு பனி உறைந்து சிவலிங்கம் வடிவில் காட்சி தருகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அமர்நாத் யாத்திரை

இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமர்நாத் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் யாத்ரீர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டாய சுகாதாரச் சான்றிதழ்களை வழங்க 112 மருத்துவர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் அண்மையில் நடந்த அமர்நாத் கோயில் நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் ஜூன் 29-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரையை தொடங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

SCROLL FOR NEXT