லிவ் இன் ரிலேஷன்ஷிப் 
தேசம்

மனைவி இருக்கும் போது லிவ் இன் வாழ்க்கைக்கு உரிமை இல்லை... உயர்நீதிமன்றம் பரபரப்பு!

காமதேனு

மனைவி இருக்கும் போது கணவன், மற்றொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ சட்டப்படி உரிமையில்லை என அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது சதாப்கான் என்பவருக்கும் சினேகா தேவி என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். இதை அறிந்த சினேகா தேவியின் பெற்றோர் தங்கள் மகளை மீட்டுத் தர வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். தாங்கள் இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் எனவும், தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக முடிவு செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உண்டு எனவும் கூறி தம்பதிகள் இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுத்திருந்தனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி மற்றும் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடுத்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் இணைந்து வாழ உரிமை உண்டு எனவும், பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது முகமது சதாப்கானுக்கு ஏற்கனவே பரிதா கட்டூன் என்பவருடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்றம்

இதன் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ”இஸ்லாமியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து வரும் போது, வேறொரு பெண்ணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க இஸ்லாம் மதத்தின் கீழ் அனுமதி இல்லை. விவாகரத்து பெற்ற பின்னர் வேறு ஒருவருடன் இணைந்து வாழ்வது தவறில்லை. ஆனால் இந்த விவகாரம் அரசியலமைப்பு மற்றும் சமூக அறநெறி மற்றும் நெறிமுறைகளின் சமநிலையை சிதைத்து விடும். சமுதாயத்தில் அமைதி மற்றும் அமைதிக்கு தேவையான சமூக ஒற்றுமை மங்கி மறைந்து விடும்” என்று தெரிவித்தனர். தொடர்ந்து சினேகா தேவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

SCROLL FOR NEXT