தேசம்

தொடர் நஷ்டத்தில் சென்னை போக்குவரத்துக் கழகம்: புதிய திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்குமா?

காமதேனு

தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வருவாயைப் பெருக்கப் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் நிதி திரட்ட போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவுப் பேருந்துகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் பார்சல்களைக் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாகத் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்குப் பார்சல் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் பார்சல்களை அனுப்பி வருகின்றனர். போக்குவரத்துக் கழகங்களின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அது போல், தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் வருவாயைப் பெருக்கப் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் நிதி திரட்ட போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பேருந்தின் ஓட்டுநருக்கு இருக்கைக்குப் பின்புறமும், பயணிகளின் இருக்கைக்குப் பின்புறமும், வெளிநோக்கு கண்ணாடிகளிலும் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்தில் ஒலி வடிவிலும் விளம்பரங்கள் இடம்பெற உள்ளன. விளம்பரங்கள் மூலம் வருமானத்தைப் பெருக்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT