மெட்ரோ
மெட்ரோ மெட்ரோவில் டிக்கெட் பரிசோதகர் பெயரில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - மெட்ரோ நிர்வாக எச்சரிக்கை
தேசம்

அப்படி ஒரு பணியே இல்லை; ரயிலில் வலம் வரும் போலி டிடிஆர்: பயணிகளை அலர்ட் செய்யும் மெட்ரோ நிர்வாகம்

காமதேனு

’’மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்ற பணி இல்லை; பரிசோதகர்கள் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுத் தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’பயண அட்டைகள், டோக்கன்கள், க்யூஆர் கோடு உள்ளிட்டவை மூலமாகத்தான் பயணிகள் உள்ளே வருவதையும், வெளியேறுவதையும் கண்காணித்து வருகிறோம். தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தின் மூலம் மட்டுமே பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. டிக்கெட் பரிசோதகர் என்ற பணி மெட்ரோவில் இல்லை.

சிலர் விஷமத்தனமான செயலில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் அத்துமீறல்கள் நடந்து வருவதாக மெட்ரோ நிர்வாகத்திடம் புகார் வந்துள்ளது. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT