மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு
மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு  தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயம்!
தேசம்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயம்!

காமதேனு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 31-ம் தேதி இதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதாவது பிப்ரவரி 15-ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று அரசு தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே, தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவில், "அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். வங்கிக்கணக்கு புத்தகம், தபால் புத்தகம், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, உழவர் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணையதள முகவரி மற்றும் காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT