கைது செய்யப்பட்ட பாண்டி முருகன்.
கைது செய்யப்பட்ட பாண்டி முருகன். வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் மனைவி; வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவன்: அடுத்து நடந்த அதிர்ச்சி
தேசம்

வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் மனைவி; வீடியோவை பார்த்து அதிர்ந்த கணவன்: அடுத்து நடந்த அதிர்ச்சி

காமதேனு

பீகாரைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து அதை அவரது கணவருக்கு வாலிபர் அனுப்பினார். இதனால் பீகார் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வீடியோவை அனுப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் நவ்காதிக் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், தனது 22 வயது மனைவியுடன் கோவை மாவட்டம், அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில் தங்கி கடந்த 2021-ம் ஆண்டு முதல் கூலி வேலைக்குச் சென்று வந்தார்.

அப்போது அப்பகுதியில் வசித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி முருகன் என்ற வாலிபருக்கும், பீகார் வாலிபரின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய தகாத உறவு ஏற்பட்டது. இதன் பின் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதை பாண்டி முருகன் வீடியோவாக எடுத்துள்ளார். அத்துடன் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அத்துடன் இந்த வீடியோவைக் காட்டி அந்த பெண்ணை பலமுறை பாண்டி முருகன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ குறித்து பீகார் தம்பதியர், கடந்த 17-ம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பாண்டி குமாரின் தொந்தரவு காரணமாக கெம்பநாயக்கன்பாளையத்தை விட்டு பீகார் தம்பதியர் கடந்த சில நாட்களாக கணேசபுரம் பகுதிக்கு வீடு மாறினர். ஆனால், மீண்டும் அந்த வீடியோவை பீகார் இளம்பெண்ணுக்கு பாண்டி முருகன் நேற்று காலை அனுப்பினார். இதனால் மன வேதனையில் இருந்த அவரது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலறிந்த அன்னூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து பாண்டி முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கெம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள நண்பரைப் பார்க்க வந்த பாண்டி முருகனை எஸ்.ஐ பாண்டிராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று கைது செய்தனர். அவர் மீது இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT