மோசடி
மோசடி லிப்ட் கேட்டவரை பைக்கில் ஏற்றிச் சென்று கொள்ளை: நெல்லையில் பரபரப்பு
தேசம்

லிப்ட் கேட்டவரை பைக்கில் ஏற்றிச் சென்று கொள்ளை: நெல்லையில் பரபரப்பு

காமதேனு

நெல்லை மாவட்டத்தில் பைக்கில் லிப்ட் கேட்டு நின்றவருக்கு, லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்று மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(48), இவர் நாங்குநேரி பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் வேலைசெய்து வருகின்றார். இவர் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நின்றுகொண்டு இருந்தார், அங்கிருந்து தான் வேலைசெய்யும் மில்லுக்கு செல்ல லிப்ட் கேட்டு நின்றார். அப்போது அந்த வழியாக ஒரே டூவீலரில் வந்த இருவர், பாலசுப்பிரமணியனுக்கு லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்றனர்.

அவரை மில் அருகே இறக்கிவிட்டுவிட்டு லிப்ட் கொடுத்த இருவரும் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டினர். மேலும் பாலசுப்பிரமணியனிடம் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டு, 500 ரூபாய் பணம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்பட அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நாங்குநேரி போலீஸார், அப்பகுதியின் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT