கொலை
கொலை  பேருந்து நிலையத்தில் முதியவர் கொலை: பயணிகள் கண்முன்பே நடந்த வெறிச்செயல்
தேசம்

‘சேரிடம் அறிந்து சேர்’ -பட்டப்பகல் முதியவர் கொலை உணர்த்தும் பாடம்!

காமதேனு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டப் பகலில் பயணிகள் கண்முன்பே முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், கூனங்குளம் புதுதெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(60) கூலி தொழிலாளியாக இருந்தார். இவர் வெள்ளையடிப்பது தொடங்கி, கட்டிட வேலைவரை கிடைக்கும் வேலைக்கு எல்லாம் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இவருடன் இதேபகுதியைச் சேர்ந்த கோகுல் அலெக்ஸ் சிந்தர்(28), பேச்சிமுத்து(40) ஆகியோர் வேலைசெய்து வருகின்றனர்.

மாரிமுத்து, பேச்சிமுத்து, கோகுல் அலெக்ஸ் சிந்தர் ஆகியோர் வயது வித்தியாசம் இன்றி எப்போதும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதும் வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் மாரிமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, தன் ஊரான கூனங்குளம் செல்ல பேருந்துக்காக காத்து நின்றார். அப்போது கோகுல் அலெக்ஸ் சிந்தரும், பேச்சிமுத்துவும் மது போதையில் அங்கு வந்தனர். ”எங்கள் இருவரது செல்போனையும் காணவில்லை. நீ எடுத்தாயா..” என வாக்குவாதம் செய்துகொண்டே, திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மாரிமுத்து நிலைகுலைந்தார். அவரை இருவரும் சேர்ந்து தூக்கியும் வீசினர்.

இதில் பயணிகள் கண்முன்பே மாரிமுத்து உயிர் இழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கோகுல் அலெக்ஸ் சிந்தர், பேச்சிமுத்து இருவரையும் கைது செய்தனர். ’சேரிடம் அறிந்து சேர்’ என்ற முதுமொழியை உணராத முதியவர் கொலையான சம்பவம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT