காற்றழுத்த தாழ்வு நிலை. 
தேசம்

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை மையம் எச்சரிக்கை!

காமதேனு

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை

அக்.21-ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அக்டோபர் 20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் போதிய அளவு பெய்யாத நிலையில், பருவமழை நிறைவடைந்து முறையாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அரபிக்கடலில் உருவாகும் இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிகிறது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் புரட்டி எடுக்கும் கனமழையால் தலைநகர் திருவனந்தபுரம் அதிக அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கழகூடம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து மிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT