தேசம்

மூன்றாவது மாடியில் இருந்து குதித்த அரசு பள்ளி மாணவி : தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்ன?

காமதேனு

சேலம் அருகே அரசு பள்ளி மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி. இவர் மேச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இன்று காலை அவரது பெரியப்பா மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பள்ளியில் காலை வழிபாட்டிற்குச் செல்லாமல் அந்த மாணவி அமர்ந்திருந்தார். இந்நிலையில், திடீரென பள்ளியின் 3-வது மாடிக்குச் சென்றவர் அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து மாணவியைப் பார்த்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பள்ளியில் ஆசிரியருக்கும், மாணவிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT