தேசம்

ராட்சத கிரேன் மோதியதில் நொறுங்கிய அரசுப் பேருந்து; தூக்க கலக்க‌த்தில் நடந்த விபரீதம்: உயிர் தப்பிய ஓட்டுநர்

காமதேனு

மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்து மாநகர பேருந்தின் முன்பகுதி நொறுங்பியது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் ஓட்டுநர் உயிர் தப்பினார்.

சென்னை வடபழனி ஆற்காட் சாலையில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.15 மணியளவில் ரத்னா ஸ்டோர் அருகே ராட்சத கிரேன் இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ராட்சத கிரேன் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற மாநகர பேருந்தின் (159a தடம்எண்) மீது மோதியதில், பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தன. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால் இவ்விபத்தில் பேருந்து ஒட்டுநர் பழனிக்கு லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வடபழனி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த பேருந்தை அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்து ஏற்படுத்திய வடமாநிலத்தை சேர்ந்த கிரேன் ஆப்ரேட்டரை பிடித்து விசாரணை நடத்தியதில் தூக்க கலக்கத்தில் கிரேனை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT