தேசம்

சான்றிதழில் மோசடி செய்து அரசுப்பள்ளியில் சேர்ந்த ஆசிரியை: 4 பிரிவுகளில் வழக்கு

காமதேனு

சான்றிதழைப் போலியாகத் திருத்தி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்த்தவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம், தென்காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கவுந்தம்பாடி பகுதியைச் சேர்ந்த இயேசு மரியா என்பவர் ஆசிரியையாக பணிசெய்து வருகிறார்.

இவர் கடந்த 1992-ம் ஆண்டு, பட்டயப்படிப்பு படிக்கும்போது தன் சான்றிதழைத் திருத்தி பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு கிளம்பியது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற துறைரீதியான சான்றிதழ் உண்மைத்தன்மை சரிபார்க்கும் பணியிலும் இது தெரியவந்தது.

பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன், கவுந்தம்பாடி காவல் நிலையத்தில் ஆசிரியை இயேசு மரியா மீது புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மோசடி உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் இயேசு மரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பவானி வட்டாரக் கல்வி அலுவலர் இயேசு மரியா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளார். இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT