பைஜூஸ் 
தேசம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பைஜூஸ்: ₹ 8,245 கோடி இழப்பு!

காமதேனு

ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் முன்னனி நிறுவனமான பைஜூஸ்,  தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி கடும் இழப்பைச் சந்தித்து வருகிறது.

பைஜூஸ்

கா்நாடகத்தின் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘திங்க் & லோ்ன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம், ‘பைஜூஸ்’ என்னும் பெயரில் இணையவழி மற்றும் நேரடியாக கல்விச் சேவையை வழங்கி வருகிறது.

முதலில், இணையவழி கல்விச் சேவையில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு லாபத்தில் இயங்கிய பைஜூஸ், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் 2021-22 நிதியாண்டுக்கான தனது நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

பைஜூஸ்

அதன்படி பைஜூஸ் நிறுவனம் கடந்த 2021-22 நிதியாண்டில் வரிக்கு முந்தைய இழப்பாக ₹8,370 கோடி இழப்பை சந்தித்துள்ளது. வரிக்கு முந்தைய வருவாயாக ₹6,679 கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய 2020-21 நிதியாண்டில் இந்த நிறுவனம் ₹4,143 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.

இத்துடன் ஒப்பிடுகையில் இழப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதுமட்டுமின்றி, சமீபத்தில்  பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு ₹8,200 கோடியாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT