தண்டனை வழங்கப்பட்ட அகிலன்
தண்டனை வழங்கப்பட்ட அகிலன் முதல் திருமணம் மறைப்பு; சிறுமியை ஏமாற்றி திருமணம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை
தேசம்

முதல் திருமணம் மறைப்பு; சிறுமியை ஏமாற்றி திருமணம்: இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

காமதேனு

காஞ்சிபுரத்தில் முதல் திருமணத்தை மறைத்து 16 வயதான சிறுமியை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அய்யன்சேரி கிராமம் பகுதியை சேர்ந்த நாகதாஸ் என்பவரின் மகன் அகிலன் (32). இவர் தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வயது 16 சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து ஏற்கெனவே, திருமணமானதை மறைத்து திருமணம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது ஒரு குழந்தைக்கு தாயான பின் அவரை அகிலன் ஏமாற்றிவிட்டதாக சிறுமியின் பெற்றோர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றச்சாட்டை உறுதி செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கானது செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அகிலன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அகிலனுக்கு  7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 15,000 ரூபாய் அபராத தொகையும் இவற்றை கட்டத் தவறினால் ஓராண்டு காலம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தும் செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT