தேசம்

மோசடி பத்திரப்பதிவு ரத்துக்கு பிறகு 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு: தமிழக அரசு தகவல்

கி.மகாராஜன்

மோசடி பத்திரப்பதிவு ரத்து நடைமுறைக்கு பிறகு 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மோசடி, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத வீட்டடி மனைகள் பதிவு நடைபெற்றிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அரசின் அங்கீகாரம் பெறாத மனைகளை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் பத்திரப்பதிவு சட்டத் திருத்தம் 22 ஏ (போலி, மோசடி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் நடைமுறை) அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT