தேசம்

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க காதணி: ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிப்பு!

காமதேனு

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் பாரம்பரியமான தொல்பொருள்கள் பலவும் கிடைத்து வருகிறது. அந்தவகையில் இப்போது 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி கிடைத்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இங்கு தொடர்ந்து நடந்துவரும் அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இங்கு எழுபதுக்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இப்போது, தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1902-ல் இங்கே அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு செய்தபோது, தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிச்சுட்டி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT