இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் உள்பட 3 பேர் கொண்ட குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தேசம்

தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் உள்பட 3 பேர் குழு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காமதேனு

தேர்தல் ஆணையத்தில் உயர் பதவிகளை நியமிக்க பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க கொலீஜியம் போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் தலைமை தேர்தல் ஆணையர் உட்பட உயர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத பட்சத்தில், தனிப் பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் இந்தக் குழுவில் இடம் பெறுவார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழுவின் ஆலோசனையின் பேரில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர். இந்த நியமனங்களுக்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறை தொடரும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதைப் போலவே பதவி நீக்கம் செய்யும் முறையும் இருக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT