தேசம்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 278 பேர் கரோனாவால் மரணம்

காமதேனு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 278 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், கரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 15,102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு ஒரே நாளில் 278 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,12,622 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 31377 பேர் குணமடைந்துள்ளதால், அதன் எண்ணிக்கை 4,21,89,887ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.41% ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.38% ஆக குறைந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,64,522 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 1,76,19,39,02 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 33,84,744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT