தேசம்

அசாமில் பிடிபட்ட உக்ரைனியர்கள்: என்ன நடந்தது?

காமதேனு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 58-வது நாளாகத் தொடர்கிறது. ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்டு 51 லட்சம் பேரை அகதிகளாக்கியிருக்கும் இந்தப் போரின் அவலங்கள் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆம், அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் இரு உக்ரைனியர்கள் பிடிபட்டிருக்கிறார்கள்.

உக்ரைனைச் சேர்ந்த கிறிஸின்ஸ்கி வொலோதிமீர்(39), நஸாரி வோஸ்ன்யுக் (21) எனும் இருவர் முறையான பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அசாமுக்கு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திரிபுரா தலைநகர் அகர்தலாவிலிருந்து டெல்லி செல்லும் திரிபுர சுந்தரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று (ஏப்.21) இவர்கள் இருவரும் பயணம் செய்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து இருவரும் கரீம்கஞ்ச் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

போர் தொடங்குவதற்கு முன்பாகவே உக்ரைனைவிட்டு வெளியேறிவிட்டதாக இருவரும் தெரிவித்திருக்கின்றனர். இருவரும் திரிபுராவுக்கு வந்து சேர்ந்தது எப்படி எனத் தெரியவில்லை என்றும் போலீஸார் கூறியிருக்கின்றனர். இவர்கள் குறித்த விவரங்கள் கோரி, டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகத்தை நாடியிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT