ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை  
தேசம்

தடுத்து நிறுத்திய போலீஸ்; தப்பி ஓடிய கார் டிரைவர்: சிக்கியது 2 டன் ரேஷன் அரிசி

காமதேனு

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடத்தலை தவிர்க்கும் வகையில் வருவாய் துறையினரும், காவல் துறையினரும் தீவிர ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் இன்று கேரளாவுக்கு கடத்திச்சென்ற இரண்டு டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர்.

தமிழக-கேரள எல்லையோரப் பகுதியில் சார் ஆய்வாளர் ராஜாக்க பெருமாள் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. காவலர்கள் தடுத்து நிறுத்தியதும் காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கித் தப்பியோடிவிட்டார். போலீஸார் காரை ஆய்வு செய்தபோது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த காவலர்கள் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிபக் கிடங்கிலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டக் காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT