தேசம்

விதிமுறைகளை மீறியதாக ஓலா நிறுவனத்திற்கு 1.68 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி

காமதேனு

விதிமுறைகளை மீறியதாக ஓலா நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி 1 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் அல்லது பிபிஐகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை கூறியுள்ளது. ஆனால், அவற்றை ஓலா நிறுவனம் மீறியதால் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நாங்கள் அனுப்பிய நோட்டீஸுக்கு சரியான பதிலைக் கூறவில்லை" என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007, பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT