தேசம்

7 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்கநகைகள் பறிமுதல்: வாகனச்சோதனையில் சிக்கிய வடமாநில கும்பல்

காமதேனு

மும்பையில் இருந்து சென்னைக்கு உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 7கோடி மதிப்புள்ள 14கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவரிடம் வருமான வரித்துறையினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சௌகார்பேட்டை ஆடியப்பா தெருவில் நேற்று இரவு யானைகவுனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக முறையில் டூவீலரில் வந்த இருவரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இரண்டு பை நிறைய தங்கநகைகள் இருந்ததைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அந்த நகைக்கு ஆவணங்கள் கேட்டு விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர். இதனால் நகைகளைப் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, நகைகளைக் கொண்டு வந்தவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிகந்தர் சாந்த்ராம் சிக்வன்(39) மற்றும் முகேஷ் பாவர்லால் ஜெயின்(49) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து எந்த பில்லும் இல்லாமல் வளையல், மோதிரம் உள்ளி 14 கிலோ தங்க நகைகளை வாங்கிவந்து, சென்னை சௌகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து நகைக்கு உண்டான ஆவணங்கள் இல்லாததால் 7 கோடி மதிப்புள்ள 14கிலோ தங்கநகைகளை வருமான வரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT