ரேஷன் அரிசி கடத்தல்
ரேஷன் அரிசி கடத்தல் கடத்த முயன்ற 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தேசம்

சென்னையிலிருந்து வெளிமாநிலத்திற்கு கடத்த முயற்சி; 11.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் சிக்கினர்

காமதேனு

சென்னையில் இருந்து வெளிமாநிலத்துக்கு கடத்த வைத்திருந்த 11.5 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஏழை எளிய மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசிகள் சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சென்னை பிராட்வே பகுதியில் உள்ள வரதா முத்தப்பன் தெருவில் லாரி ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக வெளி மாநிலத்துக்கு லாரி மூலம் கடத்துவதற்காக பதிக்கி வைத்திருந்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அங்கிருந்து 10.2 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுப்பட்ட நபர்கள்

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட ஜெய சிவா,  முத்து, விஸ்வநாதன், ரஹமத்துல்லா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல் பாரிமனையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 1.3 டன் எடை கொண்ட 26 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அண்ணாதுரை என்பவரை கைது செய்துள்ளனர்.

ரேஷன் அரிசி கடத்தல்
SCROLL FOR NEXT