தேசம்

திடீர் இடி மின்னல் காரணமாக 11 பேர் பலி: அதிரடி உத்தரவிட்ட பிஹார் அரசு

காமதேனு

பிஹார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது

பிஹாரின் பல்வேறு பகுதிகளில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இடி, மின்னல் காரணமாக பூர்னியா மற்றும் அராரியா மாவட்டத்தில் தலா நான்கு பேரும், சுபாலில் 3 பேரும் உயிரிழந்ததாக முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மோசமான காலநிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கு பேரிடர் மேலாண்மை அலுவலகம் வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே, வீட்டிலேயே இருங்கள் மற்றும் மோசமான வானிலையில் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT