டாட்டூ கோப்புப்படம் 
லைஃப்ஸ்டைல்

உஷார்... டாட்டூ குத்தும் முன் இதை எல்லாம் கவனியுங்க!

காமதேனு

நவீன வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக டாட்டூ கலாச்சாரம் மாறி வருகிறது. ஒரு காலத்தில் கிராமத்தினர் மற்றும் பழங்குடி மக்களிடம் மட்டுமே இருந்து வந்த பச்சை குத்தும் பழக்கம் இன்று நவீன டாட்டூக்களாக, இளைஞர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

பக்தி தொடங்கி, பாப் கல்ச்சர் வரை எல்லாவற்றையும் டாட்டூ மூலம் வெளிப்படுத்துகின்றனர். பெயர், சின்னம் என்ற எல்லைகள் உடைந்து உடல் முழுவதும் வண்ண வண்ண டாட்டூ குத்தி வருகின்றனர்.

டாட்டூ கோப்புப்படம்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரனாமாக விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் டாட்டூக்களுடன் வலம் வருகிறார்கள். டாட்டூக்கள் வரைய டைட்டானியம் டை ஆக்சைட், பேரியம் சல்பேட், அயர்ன் ஆக்ஸைட், மெர்குரி சல்பேட் மற்றும் காடியம் செலனைட் உள்ளிட்ட ரசானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை எல்லாம் பல்வேறு அழகு மற்றும் மேக்கப் பொருட்களில் பயம்படுத்துபவை தான் என்றாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

இதன் காரணமாக உடலில் அரிப்பு போன்ற அலர்ஜியையும் உண்டாக்குகிறது. இன்னும் ஒருசிலரின் உயிரையும் பறித்து விடுகிறது.

சமீபத்தில் பெரம்பலூரில் ஒரு கல்லூரி மாணவர் டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட அலர்ஜியால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சரும மற்றும் தோல் மருத்துவர்கள் இப்படி டாட்டூ குத்திக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என கூறுகின்றனர்.

டாட்டூ கோப்புப்படம்

ஆனால், ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக டாட்டூ குத்திக்கொள்ள விரும்பினால், குறைந்தபட்ச கவனத்துடன் அணுக வேண்டும் என அறிவுத்தப்படுகின்றனர். உடலின் எந்த பாகத்தில் டாட்டூ குத்தப்போகிறோம் என்பது முக்கியம். ஏனெனில் சில இடங்களில் மென்மையான நரம்புகள் இருக்கும். அந்த இடங்களைத் தவிர்த்து விடலாம். அதே நேரம் உடல் முழுவதும் டாட்டூ குத்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, சிறிய அளவில் உடலில் பாதுகாப்பான இடத்தில் குத்திக்கொள்ளலாம்.

எப்படி மருத்துவமனைகளில் நாம் ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியை தவிர்க்கிறோமோ, அதேபோல், டாட்டூ குத்தும் போதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஊசியை பயன்படுத்துகிறார்களா என்பதை கவனித்து கட்டாயம் தவிர்க்க வேண்டும். டாட்டூ குத்தும் ஊசி ஒருவரது உடலுக்குள் சென்று வருவதால், அவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்றோ அல்லது அலர்ஜியோ ஏற்படக்கூடும். இதனால், மிக கவனமாக பாதுகாப்பாக டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT