வாழ்க்கை

பூஸ்டர் டோஸ்: யாரெல்லாம் செலுத்திக்கொள்ளலாம், கட்டணம் என்ன?

காமதேனு

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி மருந்துகளைச் செலுத்திக்கொண்டதால் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரமும், அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் கட்டுக்குள் வந்துள்ளன. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இப்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது இந்த பூஸ்டரின் விலை 225 ரூபாய். ஊசியைச் செலுத்தும் தனியார் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக 150 வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பூஸ்டர் டோஸின் விலை 375 ஆக இருக்கும். இதேபோல் கோவாக்ஸின், கோவிஷீல்டு என எந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளப்பட்டதோ, அதே தடுப்பூசி பூஸ்டராகவும் போடப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கலாம் எனவும், இரண்டாவது தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் போட்டுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT