உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி 
சர்வதேசம்

‘புதின் மட்டும்தான் என்னுடன் பேச வேண்டும்!’ - ஸெலன்ஸ்கி திட்டவட்டம்

காமதேனு

ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நேற்று நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். ரஷ்யாவுடான பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வதே கடினமான விஷயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனின் ராணுவ பலத்தைக் குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கை என்றே இந்தப் போரை அழைக்கும் ரஷ்யா, உக்ரைன் மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக எழும் புகார்களைத் தொடர்ந்து மறுத்துவருகிறது. எனினும், தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யப் படையினர், உக்ரைனியர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றழித்த சம்பவங்கள்தான் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடினமான விஷயமாக்கியிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ரஷ்யத் தரப்பிலிருந்து அதிபர் புதினைத் தவிர வேறு யார் வந்தாலும் பேச்சுவார்த்தை நடத்த நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய அவர், போரை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். புதின்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார் என்பதால், அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசாமல் போர் நிறுத்தப்படுவதற்குச் சாத்தியமில்லை என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.

SCROLL FOR NEXT