சர்வதேசம்

கரோனா பாதிப்பு 42.48 கோடி பேர்; உயிரிழப்பு 59.05 லட்சம் பேர்

காமதேனு

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சமாக அதிகரித்துள்ளது.

மக்களை அச்சுறுத்திரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டயது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கரோனா பாதிப்பால் இதுவரை இதுவரை 9,59,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் 1.04 லட்சம் பேருக்கும், ரஷ்யாவில் 1.7 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 40,625 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்துள்ளது. 59.05 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 35.03 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT