சர்வதேசம்

`கஞ்சா வளர்க்கலாம், பயன்படுத்தலாம்': சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு இதுதான்?

காமதேனு

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், கஞ்சா வளர்ப்பதையும், உணவு மற்றும் பானங்களில் கலந்து அதனை உட்கொள்வதையும் தாய்லாந்து அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது.

கஞ்சா வளர்க்கவும், உணவுப் பொருட்களில் கஞ்சாவை கலந்து பயன்படுத்துவதையும் சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து ஆகும். இந்த சட்டப்பூர்வ அனுமதியைத் தொடர்ந்து தாய்லாந்தின் பொது சுகாதார அமைச்சர் நாளை முதல் 1 மில்லியன் கஞ்சா நாற்றுகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலமாக கஞ்சா சாகுபடி விவசாயிகளை ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசு மருத்துவ பயன்பாட்டிற்காகவே கஞ்சாவை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் பொது இடங்களில் புகைபிடித்தால் மூன்று மாத தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கஞ்சாவுக்கான சட்டப்பூர்வ தடைகள் விலகியதால், கஞ்சா கலந்த பானங்கள், இனிப்புகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

SCROLL FOR NEXT