மோடிக்கு வரவேற்பு 
சர்வதேசம்

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்... அதிர்ந்து போன அமீரகம்!

காமதேனு

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் 35 ஆயிரம் பேர் திரண்டு வந்தேமாதரம் பாடியுள்ளது அனைவரையும்  மெய் சிலிர்க்க  வைத்துள்ளது. 

மோடியை வரவேற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர்

கத்தாரில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு நேற்று சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார்.

அதன்பிறகு பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை பிரதமர்  ஏற்றுக்கொண்டார். அங்கு தனக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பை பார்த்து பிரதமர் மோடி பூரித்துப் போனார். மேலும் சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்வதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

இதையடுத்து நேற்று இரவில் அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியத்தில், 'அஹ்லான் மோடி' என்ற பெயரில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன்பு அங்கு கூடியிருந்த 35,000-க்கும் அதிகமான இந்தியர்கள் ஒன்று கூடி வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

ஒரேநேரத்தில் 35,000க்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்து இந்த பாடலைப் பாடியதால் அந்த மைதானமே அதிர்ந்தது. இந்தியா மீதான தேசப்பற்றை பறைசாற்றும் வகையில் பாடப்பட்ட இந்த பாடல் அனைவரையும் சிலிர்க்க வைத்தது. மொத்தத்தில் அங்கு பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிக உற்சாகமானதாகவும், எல்லை கடந்த அன்பு மிக்கதாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT