சர்வதேசம்

ஹமாஸ்-இஸ்ரேல் விவகாரம்... எகிப்து அதிபருடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

காமதேனு

எகிப்து அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியுள்ளார்

கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், எகிப்து அதிபர் அப்தெல் அல்-சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “மேற்கு ஆசியாவில் மோசமாகி வரும் பாதுகாப்பு மற்றும் மனிதத்துவ சூழல் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். தீவிரவாதம், வன்முறை மற்றும் மக்களின் உயிரிழப்பு தொடர்பான கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம். விரைவில் அமைதி, நிலையான சூழலை உருவாக்குவதிலும், மனிதாபிமான உதவிகள் செய்ய வேண்டியிருப்பதன் அவசியத்திலும் இருவரும் உடன்பாடு கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT